31 ஆம் நாள் நினைவு அஞ்சலி திரு. சுப்பிரமணியம் (மணி) நாகமுத்து


31st Day


31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும் நன்றி நவிலலும்


04.12.2010 சனிக்கிழமை பகல். 3300 Mc. Nicolle Avenue, Scarborough (Middlefield & Mc. Nicolle) இல் அமைந்துள்ள Baba Banquet மண்டபத்தில் நடைபெற இருக்கும் அன்னாரது ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதிய போசனத்திலும் பங்கு பற்றிச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்பின் உருவாய்
ஆருயிர்த் துணையாய்
இனிய சொல்லிற்கு இலக்கணமாய்
ஈன்ற அருஞ் செல்வங்களிற்கு நல் வழிகாட்டியாய்
உற்றார் உறவினருக்கு ஊன்றுகோலாய்
என்றும் இன்முகம் மலர
ஏற்றம் பல கண்ட
ஓர் ஆலய மணியாக எல்லோரினது நெஞ்சங்களிலும் நிறைந்து. 
நீங்காத நினைவாக நிலைத்து நிற்கும்
எங்கள் அன்புத் தெய்வத்திற்கு
எமது நல் அஞ்சலிகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!  

எமது அன்புத் தெய்வத்தின் மறைவு அறிந்து, உடன் வருகை தந்த உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், மற்றும் தொலை பேசி மூலமும், மின் அஞ்சல் மூலமும், மலர் வளையங்கள் செலுத்தி அனுதாபச் செய்தி வழங்கியவர்களுக்கும், இறுதி அஞ்சலியில் நேரில் வந்து கலந்து கொண்டவர்களுக்கும், ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், கிரியைகளை நடாத்திய அந்தணர்களுக்கும், மற்றும் எமக்கு பக்க பலமாய் நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


தொடர்புகளுக்கு   905-239-5563